தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்திற்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு
|‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்;-
"இயக்குநர் தங்கர் பச்சான் படைத்திருக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும்.
இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!" என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் '#கருமேகங்கள்கலைகின்றன'
திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம்,… pic.twitter.com/6gm1jAdwOj